பாலிவுட்டின் பிரபல தம்பதியான சைஃப் அலிகான் - கரீனா கபூருக்கு பிப்ரவரி 21ஆம் தேதி இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து அவருக்குப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்துத் தெரிவித்துவந்தனர்.
மகளிர் நாள்: முதன்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட கரீனா கபூர் - கரீனா கபூருக்கு இரண்டாவது ஆண்குழந்தை
மும்பை: சர்வதேச மகளிர் நாளை முன்னிட்டு தனது இரண்டாவது குழந்தையின் முதல் படத்தை நடிகை கரீனா கபூர் கான் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
![மகளிர் நாள்: முதன்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட கரீனா கபூர் women](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10917056-1091-10917056-1615185353227.jpg)
women
இந்நிலையில், இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் நாளை முன்னிட்டு கரீனா கபூர் முதன்முறையாக தனது இரண்டாவது ஆண் குழந்தையின் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில், பெண்கள் செய்ய முடியாதது எதுவுமில்லை. மகளிர் நாள் வாழ்த்துகள் என் அன்பே எனப் பதிவிட்டார். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே இந்தப் புகைப்படமானது சமூக வலைதளத்தில் வைரலானது.