மும்பை : விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் மூத்த நடிகர்கள் அனுபம் கெர், மிதுன் சக்கரபோர்த்தி முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ்.
இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்துவருகிறது. மார்ச் 11ஆம் தேதி வெளியான இந்தப் படம் முதல் நாளிலேயே ₹.3.55 கோடி வசூலித்தது.
மறுதினம் சனிக்கிழமை ₹.8.50 கோடியும், அடுத்தடுத்த தினங்களில் (ஞாயிறு, திங்கள்) ₹.15.10 மற்றும் ₹.15.05 கோடிகளை வசூலித்தது. அடுத்து செவ்வாய் ₹.18 கோடி என அந்த வாரத்தில் சுமார் ₹.60.20 கோடி வரை வசூலித்தது. இந்த நிலையில் படம் தற்போது ₹.167.45 கோடிகள் வரை வசூலித்துள்ளது.
காஷ்மீருக்காக மாணவப் பருவத்திலே போராடினேன்- மனம் திறந்த வானதி சீனிவாசன் எம்எல்ஏ!
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் ஜம்மு காஷ்மீரில் 1989-90களில் பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்து காட்சிப்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் மூத்த நடிகரான அனுபம் கெர், பல்லவி ஜோஷி, மிதுன் சக்கரபோர்த்தி, தர்ஷன் குமார், புனீர் இஸ்ஸார், மிரினால் குல்கர்னி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு உத்தரப் பிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் வருமான வரி விலக்கும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெறுப்பை உமிழ்கிறது, ஒருசாரர் வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் சில எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்பை தூண்டுகிறது- ஜெய்ராம் ரமேஷ்!