அமேசான் ப்ரைமில் 2019ஆம்ஆண்டு ஒளிபரப்பான 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தத் தொடரில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் - பிரியாமணி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தேசிய புலனாய்வு அமைப்பில் ரகசியமாகப் பணிபுரியும் ஒரு நடுத்தர வர்க்க மனிதனைப் பற்றிய ஆக்ஷன் கலந்த குடும்பக் கதையாக அமைந்திருந்த இந்தத் தொடர், 10 பகுதிகளாக ஒளிபரப்பாகியது.
இந்தியில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டாலும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. தற்போது இந்த தொடரின் இரண்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாவது சீசனில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் சமந்தா வெப் சீரிஸில் அறிமுகமாகிறார். முதல் சீசனில், ஷரிப் ஹாஷ்மி, நீரஜ் மாதவ், பவன் சோப்ரா, கிஷோர் குமார், குல் பனாக் ஆகியோரும் இரண்டாவது சீசனில் நடித்துள்ளனர்.