மும்பை:ஹீரோபன்ட்டி படத்தின் இரண்டாம் பாகத்தில் டைகர் ஷ்ரோப் ஜோடியாக நடிக்க தாரா சுதாரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
திரைப்பட ஆய்வாளர் தரன் அதார்ஷ் இந்தத் தகவலை உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சாஜித் நதியாத்வாலா தயாரிப்பில் உருவாகும் ஹீரோபன்ட்டி 2 படத்தில் டைகர் ஷ்ரோப் ஜோடியாக நடிக்க தாரா சுதாரியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.