பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வருபவர் கரீனா கபூர். சமெலி, தேவ், ஓம்கரா எனப் பல திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 19 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் வெற்றிகரமான நடிகையாக திகழ்ந்துவரும் கரீனா சக நடிகரான சயிஃப் அலிகானை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று வயதில் தைமூர் அலிகான் என்னும் மகனும் உள்ளார்.
ஆர்வமுடன் ஆர்கானிக் கார்டன் காய்கறிகளைப் பறிக்கும் தைமூர் அலிகான்! - காய்கறிகளை ஆர்வமுடன் பறித்த தைமூர் அலிகான்
கரீனா கபூரின் மகன் தைமூர் அலிகான் ஆர்கானிக் கார்டனில் உள்ள காய்கறிகளை ஆர்வமுடன் பறிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
கரீனா தற்போது ஆமீர் கான் நடிப்பில் இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் 'லால் சிங் சத்தா' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கரீனா சண்டிகர் சென்றுள்ளார். கூடவே தனது மகன் தைமூர் அலிகானையும் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவர்கள் தங்கிருந்த நட்சத்திர விடுதிக்குச் சொந்தமான காய்கறித் தோட்டத்திற்கு விடுதி செஃப் விஜயசந்திரனுடன் தைமூர் சென்று காய்களைப் பறித்துள்ளார். தைமூர், காய்கறிகளைப் பறிக்கும் வீடியோவை செஃப் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் அவர், ’தைமூர் இங்கு வந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதுமட்டுமல்லாது அவனுக்கு வேண்டிய உணவை அவனே சமைக்கிறான். சமையல் செய்வதை தைமூர் விரும்புகிறான். தைமூர், காய்கறிகளைச் சாப்பிட விரும்புகிறான். சூப்கள், சாலட், கார்டன் கிரீன் ஃப்ரெஷ் வெந்தயம் பரத்தா போன்றவை அவனது விருப்பமாக இருக்கிறது. தைமூருக்கு எங்கள் ஆர்கானிக் கார்டனை மிகவும் பிடித்துள்ளது” என்றார்.
TAGGED:
plucked organic vegetables