தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

டாப்ஸியின் 'சபாஷ் மித்து' - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - நடிகை டாப்ஸி

டாப்ஸி நடிக்கும் 'சபாஷ் மித்து' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

shabaash mithu
shabaash mithu

By

Published : Jan 29, 2020, 1:14 PM IST

'சாந்த் கி ஆங்க்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டாப்ஸி தற்போது 'தப்பட்', 'ஹசீன் தில்ரூபா', 'சபாஷ் மித்து' ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் 'சபாஷ் மித்து' படத்தில் நடிகை டாப்ஸி, மிதாலியாக நடிக்கிறார். வையாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ராகுல் தொலகியா இயக்குகிறார்.

இந்தப்படத்தின் தலைப்பு கடந்த மாதம் மிதாலி ராஜ் பிறந்தநாளன்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

'சபாஷ் மித்து' - ஃபர்ஸ்ட் லுக்

கிரிக்கெட் பேட் உடன் மைதானத்தில் சிங்கப்பெண்ணாக டாப்ஸி நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ், ராஜஸ்தானில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, இன்று தெலங்கானாவில் குடிபெயர்ந்து இந்தியாவின் மகளாக வெற்றிவாகை சூடியுள்ளார்.

மிதாலி ராஜ்

சிறந்த பேட்ஸ்வுமன், அதிக ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கும் இவர் உமன் சச்சின் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீராங்கணை என்ற பெருமைக்குரிய மிதாலியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

மிதாலி ராஜ் - டாப்ஸி

இதையும் படிங்க...

லண்டனில் ஆட்டம் பாட்டத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details