தமிழ்நாடு

tamil nadu

'ராஷ்மி ராக்கெட்' படப்பிடிப்பு தொடக்கம்: உற்சாகத்தில் டாப்ஸி

By

Published : Nov 4, 2020, 3:43 PM IST

மும்பை: 'ராஷ்மி ராக்கெட்' படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக டாப்ஸி தனது சமூக வலைதளப்பக்கம் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

Taapsee Pannu
Taapsee Pannu

சமீபகாலமாக இந்தியத் திரையுலகில் விளையாட்டை மையப்படுத்தி அதிக படங்கள் எடுக்கப்பட்டுவருகின்றன. தற்போது நடிகை டாப்ஸி தடகள வீராங்கனை ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்க உள்ள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தமிழ் இயக்குநர் நந்தா பெரியசாமி கதையில் இயக்குநர் ஆகார்ஷ் குரானா இயக்கும் இப்படத்திற்கு 'ராஷ்மி ராக்கெட்' எனப் பெயர் வைத்துள்ளனர். ஓட்டப்பந்தய வீராங்கனையாக டாப்ஸி இதில் நடிக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக டாப்ஸி பன்னு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்த டாப்ஸி

அந்தவகையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக டாப்ஸி தெரிவித்துள்ளார். தடங்களில் ஒரே ஒரு பெயரை மட்டுமே கேட்கப் போகிறோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என டாப்ஸி தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து இந்திப் படங்களில் நடித்துவரும் டாப்ஸி சமீபத்தில் ஹசீன் தில்ருபா என்ற த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பை முடித்தார்.

ABOUT THE AUTHOR

...view details