இந்தியில் ஸ்போர்ட்ஸ் ட்ராமா வகையறாவில் உருவாகிவரும் 'ராஷ்மி ராக்கெட்' திரைப்படத்தில் நடிகை டாப்ஸி பன்னு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். ஆகார்ஷ் குர்ரானா இயக்கும் இந்தத் திரைப்படத்தை ரோனி ஸ்குருவாலா, நேஹா ஆனந்த், புரன்ஜல் கந்தியா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஒரு சிறிய கிராமத்திலிருந்து வரும் பெண், தடகள விளையாட்டில் எப்படி கால்பதித்து சாதனைபுரிகிறாள் என்பதை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமையவுள்ளது.
அடுத்த ஆண்டில் திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில் படத்திற்காக டாப்ஸி கடினமான உடற்பயிற்சி மேற்கொண்டுவருகிறார். அதன் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகிவந்ததை தொடர்ந்து டாப்ஸி புதிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
50 lbs முதல் 540 lbs வெயிட்டை டாப்ஸி தூக்கி வொர்க்வுட் செய்யும் அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் பகிர்ந்துவருகின்றனர்.
இதையும் படிங்க... மாலத்தீவில் மையம் கொண்ட அழகு புயல் டாப்ஸி!