தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ராக்கெட்டில் செல்வதற்கு முன் குட்டி ஹாலிடே எடுத்துக்கொண்ட டாப்ஸி - ராஷ்மி ராக்கெட் திரைப்படம்

ஹசீனாக இருந்து ராஷ்மி ராக்கெட்டாக மாறுவதற்கு முன் குட்டி ஹாலிடே கொண்டாடுவதற்காக சகோதரிகளுடன் துபாய் சென்றுள்ளார் நடிகை டாப்ஸி.

Tapsee in vacation
Rashmi rocket bollywood film

By

Published : Nov 2, 2020, 11:06 AM IST

டெல்லி: ராஷ்மி ராக்கெட் படத்துக்கு முன் சின்ன விடுமுறையை கொண்டாட துபாய் பறந்துள்ளார் நடிகை டாப்ஸி.

அடுத்தடுத்து இந்திப் படங்களில் நடித்து வரும் டாப்ஸி சமீபத்தில் ஹசீன் தில்ருபா என்ற திரில்லர் படத்தின் படப்பிடிப்பை முடித்தார்.

இதைத்தொடர்ந்து ராஷ்மி ராக்கெட் என்ற படத்தில் அவர் நடிக்கவுள்ள நிலையில், தற்போது சின்னதாக பிரேக் எடுத்துக்கொண்டு விடுமுறையைக் கொண்டாட துபாய் பறந்துள்ளார்.

ஹசீன் தில்ருபா படத்தின் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இரு நாள்கள் கழித்து துபாய் சென்றுள்ள டாப்ஸி தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது:

ஹசீனாக இருந்து ராக்கெட்டாக தாவுவதற்கு முன்னர் துபாயில் சின்னதாக விடுமுறை கொண்டாட்டம் என்று நீளமான ஸ்கர்ட் அணிந்து கைகளை றெக்கை போல் விரித்தவாறு புகைப்படத்தை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.

டாப்ஸியுடன் அவரது சகோதரிகள் ஷாகுன் மற்றும் ஈவானியா பன்னு ஆகியரும் துபாய் சென்றுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details