நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துவரும் கங்கனா ரனாவத், திரைத்துறையில் பெரிய நடிகர்களின் வாரிசுக்கு முன்னுரிமை கொடுக்கும் கரண் ஜோகர் போன்ற ஆட்களை டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர் போன்ற நடிகைகள் சார்ந்து பிழைக்கின்றனர். அவர்கள் ‘பி-கிரேட்’ நடிகைகள் என கடுமையாக விமர்சித்தார்.
சொந்த பகைக்கு மற்றவர் சாவை பயன்படுத்துகிறார் கங்கனா - டாப்ஸி - சுஷாந்த் சிங் மரணம்
கங்கனா ரனாவத்தின் மோசமான விமர்சனத்துக்கு நடிகை டாப்ஸி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளிக்கும்போது பேசிய டாப்ஸி, கங்கனா சொல்லும் ஆட்களை சார்ந்து நான் பிழைக்கவில்லை. அவர்களை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. தொழில்முறை பழக்கம்தான், தனிப்பட்ட முறையில் தெரியாத ஒருவரை நான் எப்படி விமர்சனம் செய்ய முடியும். வாரிசுக்கு முன்னுரிமை அளிக்கும் சம்பவத்தால் நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் கங்கனா போன்ற ஆட்கள் என் கடின உழைப்பை தவறாக சித்தரிக்கிறார்கள் என்றார்.
மேலும் அவர், எனக்கு படங்கள் ஏதும் இல்லை என கங்கனா கூறுகிறார். கடந்த ஆண்டு 3 படங்களில் நடித்துள்ளேன். தற்போது 5 படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன். கங்கானா மற்றவர் சாவில் தன் சொந்த பகையை தீர்க்க நினைக்கிறார். அவர் கருத்தோடு ஒத்துப்போகாததால் வாய்க்கு வந்தபடி பேசித் திரிகிறார் என விமர்சித்துள்ளார்.