தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாலத்தீவில் மையம் கொண்ட அழகு புயல் டாப்ஸி! - மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற தப்ஸி

தனது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க ஒரு மாதம் இருக்கும் நிலையில் நடிகை டாப்ஸி மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள தப்ஸி
மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள தப்ஸி

By

Published : Oct 7, 2020, 3:13 AM IST

நடிகை டாப்ஸி பன்னு ‘ரஷ்மி ராக்கெட்’ என்னும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க ஒரு மாதம் இருக்கும் நிலையில், மாலத்தீவுக்கு தனது தங்கை மற்றும் தோழியுடன் விசிட் அடித்துள்ளார் டாப்ஸி.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அப்டேட்களை அள்ளி வீசி வந்தார் டாப்ஸி.

கடலுக்கு முன்பாக தான் நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, “அடுத்த சில நாட்களுக்கு இதுதான் வீடு” என்று பதிவிட்டிருந்தார்.

விடுமுறை காலத்தில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்காக டாப்ஸி பகிர்ந்தார்.

அண்மையில் சில செய்தி தொலைக்காட்சிகளை பெயர் குறிப்பிடாமல் டாப்ஸி விமர்சித்திருந்தார். கரோனா காலத்தில் திரையரங்குகள் மூடி இருந்தபோது இந்த தொலைக்காட்சிகள் நடிகர்களுக்கு பதிலாக மக்களை மகிழ்வித்தன.

தற்போது திரையரங்குகள் திறக்க உள்ளதால் இந்தத் தொலைக்காட்சிகள் உண்மையான செய்தியை நோக்கி தனது கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details