சமீபகாலமாக இந்தியத் திரையுலகில் விளையாட்டை மையப்படுத்தி அதிக படங்கள் எடுக்கப்பட்டுவருகின்றன.
தற்போது நடிகை டாப்ஸி தடகள வீராங்கனை ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்க உள்ள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தமிழ் இயக்குநர் நந்தா பெரியசாமி கதையில் இயக்குநர் ஆகார்ஷ் குரானா இயக்கும் இப்படத்திற்கு 'ராஷ்மி ராக்கெட்' எனப் பெயர் வைத்துள்ளனர். ஓட்டப்பந்தய வீராங்கனையாக டாப்ஸி இதில் நடிக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இந்தப் படத்திற்காக டாப்ஸி உடலளவிலும் மனதளவிலும் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது டாப்ஸி உடற்பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்த கடினமான உடற்பயிற்சி என்னை கடினமாக்கவில்லை மாறாக எனது தசைகளை” எனப் பதிவிட்டுள்ளார்.