தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இறுதிகட்டத்தை எட்டிய டாப்சியின் ‘ராஷ்மி ராக்கெட்’ - டாப்சி

குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச் பகுதியை சேர்ந்த ஒரு ஓட்டப் பந்தய வீராங்கனை, தன் அடையாளத்துக்காக சண்டையிடுவதே இதன் கதைச் சுருக்கம்.

Taapsee Pannu
Taapsee Pannu

By

Published : Jan 6, 2021, 5:25 PM IST

ஹைதராபாத்: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ‘ஹசீன் தில்ருபா’ படப்பிடிப்பை முடித்து திரும்பிய டாப்சியின் ‘ராஷ்மி ராக்கெட்’ திரைப்படம் தற்போது எடிட்டிங்குக்கு தயாராக உள்ளது.

சில மாதங்களுக்கு முன்புதான் ‘ராஷ்மி ராக்கெட்’ படத்தில் டாப்சி ஒப்பந்தம் செய்யப்பட்டார். தடகள வீராங்கனை பற்றிய படம் என்பதால், இது அவருக்கு உடலளவிலும் மனதளவிலும் சவாலானதாக இருக்கும் என கூறப்பட்டது. புனே, ராஞ்சியில் இதன் பெரும்பான்மையான படப்பிடிப்புகள் நடைபெற்றன. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புக்காக ‘ராஷ்மி ராக்கெட்’ படக்குழுவினர் குஜராத் செல்லவுள்ளனர்.

குஜராத் பகுதியில் எடுக்க வேண்டிய காட்சிகளை இதன் இயக்குநர் ஆகார்ஷ் குரானா முதலாவதாக முடிக்க நினைத்துள்ளார். ஆனால், கரோனா காரணமாக மற்ற இடங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு கடைசியாக குஜராத்துக்கு வந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச் பகுதியை சேர்ந்த ஒரு ஓட்டப் பந்தய வீராங்கனை, தன் அடையாளத்துக்காக சண்டையிடுவதே இதன் கதைச் சுருக்கம். இந்தப் படம் இல்லாமல், டாப்சியின் ‘லூப் லபேடா’ திரைப்படமும் வெளியாக தயார் நிலையில் உள்ளது. விரைவில் டாப்சியை நாம் திரையில் பார்க்கலாம்.

ABOUT THE AUTHOR

...view details