தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தில் பேச்சாரா' படத்தை என்னால் பார்க்க முடியாது - ஸ்வஸ்திகா முகர்ஜி

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான 'தில் பேச்சாரா'வில் நடித்த நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி அந்த படத்தை தன்னால் பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.

ஸ்வஸ்திகா முகர்ஜி
ஸ்வஸ்திகா முகர்ஜி

By

Published : Jul 31, 2020, 7:19 PM IST

Updated : Jul 31, 2020, 7:52 PM IST

மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் கடைசியாக உருவான படம் 'தில் பேச்சாரா'. முகேஷ் சோப்ரா இயக்கியுள்ள இப்படம் 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்னும் பிரபல ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுஷாந்த் சிங்குக்கு ஜோடியாக சஞ்சனா நடித்துள்ளார். இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 24ஆம் தேதி டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்தின் கதாநாயகியான சஞ்சனா சங்கியின் அம்மாவாக நடித்தவர் பெங்காலி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. இவர் தன்னால் 'தில் பேச்சாரா' படத்தை பார்க்க முடியாது என கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்வஸ்திகா முகர்ஜி கூறுகையில், 'உண்மையாக என்னால் இப்படத்தை பார்க்க முடியவில்லை. இப்படம் வெளியிடுவதற்கு முன்பு நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன்.

சுஷாந்தின் திடீர் மறைவால் நான் அதிர்ச்சி நிலையில் உள்ளேன். என்னால் இந்த செய்தியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் உணர்ந்தேன்.

இந்தப் படத்தை நான் எனது குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து பார்க்க முடிவு செய்திருந்தேன். படம் வெளியான ஜூலை 24ஆம் தேதி இரவு 7:30 மணி அளவில் நாங்கள் அனைவரும் திரைப்படம் பார்க்க தொடங்கினோம்.

படப்பிடிப்பின்போது ஸ்வஸ்திகா முகர்ஜி
படத்தின் தொடக்கத்தில் கருப்பு வெள்ளை வீடியோவில் சுஷாந்தின் தனித்துவமான புன்னகையுடன் கிட்டார் வாசிக்கும் காட்சியை நான் பார்த்தவுடன் எனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது போல் தோன்றியது. உடனே நான் அங்கிருந்து எழுந்து எனது அறைக்கு சென்றுவிட்டேன். நான் அப்படத்தை ஒரு ரசிகையாக பார்க்கமுடியவில்லை. ஏனெனில் நான் அப்படத்தின் ஒரு பகுதியாக இருந்தேன். நான் அவரை நன்கு அறிந்திருந்தேன். அவர் எனது சக நடிகர் என தெரிவித்துள்ளார்.
Last Updated : Jul 31, 2020, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details