டெல்லி: நடிகர் ஸ்வரா பாஸ்கர் ஜன.6ஆம் தேதி இரவு கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பை உறுதிப்படுத்தினார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனக்கு கோவிட் பெருந்தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு, கடந்த வாரம் கரோனா பெருந்தொற்று அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர் தன்னை ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு கரோனா பாதிப்புகள் இருப்பது தெரியவந்தன. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவ சிகிச்சைகள் எடுத்துவருகிறார்.
இது குறித்து மேலும் கூறிய அவர், “ஹலோ கோவிட்! எனது ஆர்டி-பிசிஆர் சோதனையில் கோவிட் பாதிப்பு உறுதியாகியுள்ளது. முன்னதாக, கோவிட் அறிகுறிகளான காய்ச்சல், தலைவலி மற்றும் சுவை இழப்பு ஆகியவை எனக்கு இருந்தன.
நான் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துள்ளேன். இந்தப் பாதிப்பு எனக்கு விரைவில் கடந்துவிடும் என நம்புகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், குடும்பத்தை கவனித்துக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமீபத்திய பிரபலமாக ஸ்வரா பாஸ்கர் மாறியுள்ளார். ஏற்கனவே தயாரிப்பாளர் ஏக்தா கபூர், ரியா கபூர், ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோருக்கும் சமீபத்தில் கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய தூங்கா நகரம் மதுரை