ஹைதராபாத்: நடிகை சுஷ்மிதா சென் தனது தற்போதைய மனநிலை குறித்து சமூக வலைதளத்தில் மனம் திறந்துள்ளார். என் வாழ்க்கையில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன; விரைவில் அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், மனநிலை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் இருப்பதே ஒருவர் வாழ்வை மாற்றுவதற்கான முதல் படி என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரசிகர்கள் குறித்து தெரிவிக்கும்போது அவர், உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். என் வாழ்க்கையில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன; விரைவில் அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வேன். அதேபோல் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்ததையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
சுஷ்மிதா சென் தற்போது ‘ஆர்யா’ வெப் சீரிஸின் இரண்டாவது சீசனில் நடித்து வருகிறார். இதன் முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சமரசம் அடைந்த ஷங்கர் - வடிவேலு - மீண்டும் தொடங்கும் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'