1994ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகியாக வாகை சூடப்பட்டவர் சுஷ்மிதா சென். இதன்மூலம் முதல்முறையாக இந்தப் பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதையடுத்து தமிழ், பெங்காலி, இந்தி மொழிப் படங்களில் கதாநாயகியாக நடித்துவந்தவர். திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துவருகிறார்.
இந்த நிலையில், தனது மகள்களுடன் மாலத்தீவு சென்றுள்ள சுஷ்மிதா சென், அங்கு அவர்களோடு சேர்ந்து யோகா பயிற்சி மேற்கொள்ளும் விடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், நானும் எனது மகள்கள் ஆல்யா, ரெனீயும் பாரடைஸ் கடற்கரையில் சக்கர ஆசனம் செய்ய முயற்சித்துள்ளோம். இதில் நான் எங்கே இருக்கிறேன் என்பதைக் கண்டுபிடியுங்கள் என்று கேள்வியுடன் ட்வீட் செய்துள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் சுஷ்மிதா சென் கேள்விக்கு உரிய பதில் அளித்திருப்பதுடன், அவரது யோகா பயிற்சி குறித்தும் பாராட்டியுள்ளனர்.