நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், இதுவரை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக், அப்துல் பாசித் பரிஹார், ஜைத் விலாட்ரா, தீபேஷ் சாவந்த் மற்றும் சாமுவேல் மிராண்டா உள்ளிட்ட பலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ரியாவின் முன்ஜாமின் மனுவை மும்பை ஸ்பெஷல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது இந்த வழக்கு தொடர்பாக மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியைச் சேர்ந்த கரம்ஜீத் என்ற நபரை என்சிபி அலுவலர்கள் கைது செய்தனர்.
இவர் போதைப்பொருள் நுகர்வு, கொள்முதல், பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு சாட்டிங் இவர்களுடன் செய்திருப்பதாக அமலாக்க இயக்குநரகத்திற்கு அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்தது. இதனை அடுத்து என்சிபி அலுவலர்கள் இவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் வழக்கு: மேலும் ஒருவர் கைது - சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் மும்பையை சேர்ந்த மேலும் ஒருவரை என்சிபி கைது செய்துள்ளது.
போதைப்பொருள்