தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நெருக்கமான வலி, பகிர முடியாத காயம் - சுஷாந்த் நினைவை பகிர்ந்த தங்கை - பாலிவுட் பிரபலங்கள்

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் தங்கை ஷ்வேதா சிங், தனது அண்ணன் பற்றிய நினைவினை பகிர்ந்துள்ளார்.

Sushant Singh Rajput's sister
Sushant Singh Rajput's sister

By

Published : Jul 19, 2020, 12:03 PM IST

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மறைந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், அவரது நண்பர்களும் உறவினர்களும் அவருடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் சுஷாந்த் சிங்கின் தங்கை தன் அண்ணனுடனான நினைவை பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க வாழ் இந்தியரான ஷ்வேதா சிங், நடிகர் சுஷாந்தின் தங்கை ஆவார். சுஷாந்த் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொலியை பகிர்ந்துள்ளார். அந்தக் காணொலியில் அமெரிக்க பாடகர் டான் மெக்லீனின் வின்சென்ட் பாடல் வரிகள் ஒலிக்கின்றன.

சுஷாந்துக்கு புகழ்பெற்ற ஓவியர் வின்சென்டின் படைப்புகள் என்றால் மிகவும் விருப்பம். அவர் ட்விட்டர் பக்கத்தின் கவர் போட்டோகூட வின்சென்ட் கைவண்ணத்தில் உருவான 'Starry Nights' ஓவியம்தான் இருக்கும்.

இன்ஸ்டாவில் காணொலியை பகிர்ந்த ஷ்வேதா, என்றென்றும் எனது நட்சத்திர நாயகன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில், உலகத்தையே கொடுத்தாலும் தீராத ஒரு நெருக்கமான வலி. பகிர முடியாத, பகிர விரும்பாத ஓர் ஆழமான காயம் என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details