தமிழ்நாடு

tamil nadu

'அவெஞ்சர்ஸ்: எண்ட்  கேம்' ட்ரெய்லரை பின்னுக்கு தள்ளிய 'தில் பேச்சாரா'

By

Published : Jul 7, 2020, 6:38 PM IST

சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகியுள்ள 'தில் பேச்சாரா' படத்தின் ட்ரெய்லர் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்  கேம்' ட்ரெய்லரை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்துள்ளது.

தில் பேச்சாரா
தில் பேச்சாரா

மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் கடைசியாக உருவான படம் 'தில் பேச்சாரா'. முகேஷ் சப்ரா இயக்கியுள்ள இப்படம் 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்னும் பிரபல ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுஷாந்த் சிங்குக்கு ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 24ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. சுஷாந்த் சிங்கின் மறைவையொட்டி இத்திரைப்படம் ஹாட் ஸ்டார் தளத்தில், இலவசமாகக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று( ஜூலை 6) மாலை வெளியானது. ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். தற்போது வரை இப்படத்தின் ட்ரெய்லரை 2.2 கோடி பேர் பார்த்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இது 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்', 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' படங்களில் ட்ரெய்லருக்கு கிடைத்த லைக்குகளைவிட அதிகம்.

ABOUT THE AUTHOR

...view details