தமிழ்நாடு

tamil nadu

'சுஷாந்த் தற்கொலை வழக்கு விசாரணைக்கு நேரில் வரமுடியாது' - கங்கனா ரணாவத்

By

Published : Jul 25, 2020, 6:06 PM IST

மும்பை: சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக கங்கனா ரணாவத் நேரில் ஆஜராகும்படி மும்பை காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதற்கு வழக்கு விசாரணைக்கு நேரில் வரமுடியாது எனவும், இணையதளம் வாயிலாக விசாரணை மேற்கொள்ளலாம் எனவும் கங்கனா ரணாவத் தரப்பு தெரிவித்துள்ளது.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்குப் பின் பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெருமளவில் வெடித்துள்ளது.

சுஷாந்த் சிங்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் #justiceforSushantforum, #CBIEnquiryForSushant என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டரில் பலரும் ட்ரெண்டாக்கி வந்தனர்.

சுஷாந்த் சிங் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் அவரது நெருங்கிய நண்பர்கள் உட்பட 39 பேரிடம் விசாரனை மேற்கொண்டனர். அதுவும் இவரது உடற்கூறாய்வு அறிக்கையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என உறுதிப்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நடிகை கங்கனா ரணாவத்துக்கும் மும்பை காவல் துறையினர் விசாரணைக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். ஊரடங்கு காலத்தில் கங்கனா ரணாவத் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான சிம்லாவில் வசித்துவருகிறார்.

மும்பை காவல் துறையினரின் இந்தச் சம்மனை அடுத்து, ”கரோனா தொற்றுக்கு மத்தியில் சிம்லாவிலிருந்து மும்பைக்கு கங்கனா வர மாட்டார். அவருக்கான விசாரணையை நீங்கள் இணையதளம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடரலாம்” அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details