தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார்'- பாஜக தலைவர் பேச்சு - நாராயண் ரானே

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று மகாராஷ்டிரா பாஜக மூத்தத் தலைவர் நாராயண் ரானே கூறியுள்ளார்.

Sushant death death of sushant sushant singh rajput Rameshwar Chaurasiya Sushant Singh Rajput was murdered Narayan Rane சுஷாந்த் சிங் கொலை சுஷாந்த் சிங் ராஜ்புத் நாராயண் ரானே ராமேஸ்வர் சவுராசியா
Sushant death death of sushant sushant singh rajput Rameshwar Chaurasiya Sushant Singh Rajput was murdered Narayan Rane சுஷாந்த் சிங் கொலை சுஷாந்த் சிங் ராஜ்புத் நாராயண் ரானே ராமேஸ்வர் சவுராசியா

By

Published : Aug 5, 2020, 7:35 AM IST

மும்பை:மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்து மேலும் கூறுகையில், “நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. யாரையோ காப்பாற்ற அது முயற்சிக்கிறது” என்றார். சுஷாந்த் சிங் உயிரிழப்பு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பினர் (சிபிஐ) விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது தந்தை கே.கே.சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் பாஜக தலைவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னதாக சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்தக் காணொலியில், “பிப்ரவரி 25ஆம் ஆண்டு தனது மகன் ஆபத்தில் இருப்பதாக பாந்த்ரா காவல் நிலையத்துக்கு புகார் அளித்தேன். அந்தப் புகாரில் சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தேன்.

இந்நிலையில் எனது மகன் ஜூன் 14ஆம் தேதி உயிரிழந்துள்ளார். எனது மகனின் மரணம் நிகழ்ந்து 40 நாள்கள் கடந்த நிலையிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே நான் பாட்னாவில் புகார் அளித்தேன். பாட்னா காவலர்கள் முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனாலும் குற்றவாளிகள் தப்பித்துவிடுகின்றனர். இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர முயற்சிகள் எடுக்கும் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், சஞ்சய் ஜா ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சக நடிகையான ரியா சக்கரபோர்த்தி மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

'சுஷாந்த் மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை'- பாஜக தலைவர் ராமேஸ்வர் சவுராசியா

நாராயண் ரானேவை தொடர்ந்து பாஜக தலைவர் ராமேஸ்வர் சவுராசியாவும், நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழப்பு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: சுஷாந்த் தற்கொலை: பிரபலங்கள் மீதான வழக்கு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details