நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாத காலம் கழித்து, அவரது முன்னாள் காதலியான அங்கிதா லோக்கண்டே தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் அங்கிதா கூறுகையில், "சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ளுகிற ஆள் கிடையாது. நாங்கள் ஒன்றாக இருந்த காலத்தில் மிகவும் மோசமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளோம். அவர் எதையும் உற்சாகமான கடந்துச் செல்லும் மனிதராக இருந்தார். எனக்கு தெரிந்த வரையில் அவர் மன உளைச்சல் கொண்ட நபர் கிடையாது. தனது கனவுகள் குறித்து டைரியில் எழுதி வைத்துக்கொள்ளுவது போன்ற ஒரு நபரை நான் இதுவரை பார்த்தது கிடையாது. அவரது டைரியில் 5 ஆண்டுகளுக்கான திட்டம் இருந்தது. அவர் என்ன செய்யப்போகிறார், எப்படி இருப்பார் போன்றவை எழுதப்பட்டிருக்கும்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தனது ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். அவர் பெயருக்குப் பின்னால் மன அழுத்தம் என்று கூறும்போது, மனமுடையச் செய்கிறது. ஒருவேளை அவர் வருத்தத்தில் இருந்திருக்கலாம். ஆனால் மன அழுத்தம் என்பது பெரிய சொல். ஒருவரை பைப்போலார் (bipolar) என்று அழைப்பது மிகவும் பெரிது" என்று அங்கிதா தெரிவித்தார்.