நடிப்பு மற்றும் நடனத்தின் மூலம் உச்சக்கட்ட நடிகர்களையும் மலைக்க வைத்தவர் ரித்திக் ரோஷன். கிரிஷ், கிரிஷ் 2வில் சூப்பர் ஹீரோவாக அசத்தினார். இவரது நடனத்தை கண்டு வியக்காதவர்களே கிடையாது. பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் இவர், தற்போது பிரபல கணித மேதை ஆனந்த் குமாரின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியிருக்கும் 'சூப்பர் 30' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் ரித்திக் ரோஷனா இது என அனைவரையும் வாயடைத்து போனார்கள். அழுக்கு படிந்த சட்டை, கரை படிந்த முகம் என மாணவர்களுக்கு பிடித்த கணித வாத்தியாராக தோன்றியிருந்தார். ட்ரைலரை பார்த்த பின்னர் பலருக்கும் இப்படத்தை பார்க்க தூண்டியது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ரித்திக் ரோஷன் நடிப்பில் சூப்பர் 30 படம் வெளியாவதால் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.