தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஏரோபிக் வொர்க் அவுட் மூலம் 80களுக்கு கொண்டுச்சென்ற சன்னி லியோன் - சன்னி லியோன்

சன்னி லியோன் தனது கசினுடன் 80களில் மேற்கொள்ளப்பட்ட ஏரோபிக் வொர்க் அவுட் முறை தொடர்பான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Sunny
Sunny

By

Published : Apr 22, 2020, 11:26 AM IST

நடிகை சன்னி லியோன் 'ஜிஸம் 2', 'ஜாக்பாட்', 'ராகினி', 'எம்எம்எஸ்-2' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பாலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்தார். அதுமட்டுமல்லாது, தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் குத்தாட்டம் போட்ட இவருக்கு இந்தியா முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் வெறும் நடிகையாக மட்டுமல்லாது சமூக சேவகராகவும், தொழில் முனைவோராகவும் இருந்து வருகிறார். மேலும், பீட்டா இந்தியா அமைப்பில் உறுப்பினராகவும் உள்ளார். கரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், சன்னி லியோன் வீட்டில் இருந்தபடியே சமூக வலைதளம் மூலம் பிரபலங்களிடமும் ரசிகர்களிடமும் தினம்தோறும் உரையாடியும் விளையாடியும் வருகிறார்.

அந்த வகையில், ஏரோபிக்ஸ் வொர்க் அவுட்டுக்கு புதிய ஜிம் உடையை தேர்ந்தெடுக்காமல் 1980களில் உபயோகப்படுத்தப்பட்ட ஜிம் உடைகளை சன்னி லியோன் பயன்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது 80களில் மேற்கொள்ளப்பட்ட ஏரோபிக்ஸ் வொர்க் அவுட் முறையை முயற்சித்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details