நடிகை சன்னி லியோன், 2000ஆம் ஆண்டு முதலே மும்பையில் வசித்து வருகிறார். ஆனால் மும்பையில் நாளுக்கு நாள் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது தன் குடும்பத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளார்.
முன்னதாக, உலகம் முழுவதும் நேற்று முன்தினம் அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், தன் இரு மகன்கள், மகளுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் இல்லத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் சன்னி பகிர்ந்திருந்தார்.
அதில், ”கண்களுக்குப் புலப்படாத கொடிய கரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளாகாமல், என் குழந்தைகள் எங்கு பாதுகாப்பாக இருப்பார்களோ, அங்கு அவர்களை அழைத்து வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து தன் அன்னையர் தின வாழ்த்துகளையும் பகிர்ந்திருந்தார்.