கல்லூரி தகுதிப் பட்டியலில் முதலிடம் பிடித்த சன்னி! - தகுதிப் பட்டியலில் இடம் பிடித்த சன்னி லியோன்
கொல்கத்தா : இளங்கலை படிப்பிற்கான கல்லூரி தகுதிப் பட்டியலில், சன்னி லியோனின் பெயர் முதலிடம் பெற்று அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள அசுதோஷ் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலத்தில் பி.ஏ (ஹானர்ஸ்) சேர்க்கைக்கான தகுதிப் பட்டியல் அந்தக் கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தகுதிப் பட்டியலில் நடிகை சன்னி லியோன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலைப் பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் அதனை வைரலாக்கத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து, நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அடுத்த செமஸ்டரில் உங்கள் அனைவரையும் நான் கல்லூரியில் சந்திக்கிறேன்" என குறும்புத்தனமாக பதிவிட்டிருந்தார். தற்போது இந்த ட்வீட்டை நெட்டிசன்கள் அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.