தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சன்னி லியோனுக்கு மூன்று விருதுகள் - சன்னி லியோனுக்கு மூன்று விருதுகள்

பாலிவுட் நடிகை சன்னி லியோனிற்கு ஆசிய தொழில் மற்றும் சமூக மன்றத்தின் சார்பாக ஆசியாவின் செல்வாக்கு மிக்க நபர் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சன்னி லியோன், Sunny Leone
சன்னி லியோன், Sunny Leone

By

Published : Feb 10, 2020, 11:16 PM IST

இந்திய இளைஞர்களின் விருப்ப நாயகியாக இருப்பவர் பாலிவுட் நடிகை சன்னி லியோன். இவர் நடிப்பைத் தவிர்த்து பொது சேவை, தொழில் உள்ளிட்டவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவர் ஸ்டார்ஸ்ட்ரக் என்னும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.

இதனிடையே அண்மையில் ஆசிய தொழில் மற்றும் சமூக மன்றத்தின் 13ஆவது விருது வழங்கும் விழா தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் தனது கணவர் டேனியல் வெப்பர் உடன் கலந்து கொண்ட நடிகை சன்னி லியோனிற்கு மூன்று உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி 40 வயதுக்குட்பட்ட ஆசியாவின் அதிகாரமிக்க பெண்களுக்கான விருது, ஆசியாவின் செல்வாக்குமிக்க நபர் என்ற பிரிவுகளின் கீழ் சன்னி லியோன் தேர்வானார். மேலும் சன்னியின் ஸ்டார்ஸ்ட்ரக் நிறுவனத்திற்கு, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டது.

இது குறித்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்த நடிகை சன்னி லியோன், இந்த விருதுகளை வென்றது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இதற்கு நன்றி எனப் பதிவிட்டிருந்தார்.

சன்னி லியோன் ட்விட்டர் பதிவு

மேலும், தனது அழகுசாதன நிறுவனம் தனது வாழ்க்கையின் பிம்பம் என்று குறிப்பிட்டு அதற்காக தானும் தனது குழுவினரும் கடுமையாக பாடுபட்டதாக தெரிவித்தார். மேலும், இந்த விருது ஸ்டார்ஸ்ட்ரை நிறுவனத்தை உலக அளவில் எடுத்துச் சென்ற தனது குழுவினரையும், தனது கணவரையும் தான் சேரும் என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details