நடிகை சன்னி லியோன் 'ஜிஸம் 2', 'ஜாக்பாட்', 'ராகினி', 'எம்எம்எஸ்-2' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பாலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்தார். அதுமட்டுமல்லாது தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் குத்தாட்டம் போட்ட இவருக்கு இந்தியா முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது..
இவர் வெறும் நடிகையாக மட்டுமல்லாது சமூக சேவகருமாகவும், தொழில் முனைவோருமாகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாது பீட்டா இந்தியா அமைப்பிலும் உறுப்பினராக இருந்து செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் இவர் பீட்டா எழுத்து பதித்த டீ-சார்ட் அணிந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.