தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கௌரி கான் பிறந்த நாள்: கொண்டாட்ட மனநிலையில் இல்லாத ஷாருக்கின் குடும்பம் - ஷாருக் கானின் மகள் சுஹானா கான்

மும்பை: ஷாருக் கானின் மனைவி கௌரி கானின் பிறந்தநாளுக்கு அவர்களது மகள் சுஹானா கான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Suhana Khan
Suhana Khan

By

Published : Oct 8, 2021, 12:21 PM IST

நடிகர் ஷாருக் கானின் மனைவி கெளரி கானுக்கு இன்று (அக். 8) பிறந்த நாள். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை ஷாருக் கானின் குடும்பத்தினர் சிறப்பித்துவந்த நிலையில், இந்த ஆண்டு அவர்கள் கொண்டாடும் மனநிலையில் இல்லை.

ஏனெனில் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ளார். தற்போது ஷாருக் கானின் மொத்த குடும்பமும் அவரைப் பிணையில் வெளியே எடுக்க முயற்சி செய்துவருகின்றது.

இதற்காக ஷாருக் கானும் தான் நடிக்கவிருக்கும் படங்களின் படப்பிடிப்புகளைத் தள்ளிவைத்துள்ளார். ஆர்யன் கானுக்கு பிணை மறுக்கப்பட்டு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று (அக். 8) மதியம் மீண்டும் மும்பை நீதிமன்றத்தில் ஆர்யன் கானின் பிணை மனு விசாரணைக்கு வரவுள்ளது.

அதற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு போதைப்பொருள் தடுப்புப் பிரிவான என்சிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் இருக்கும் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஷாருக் கானும் கொளரி கானும் கயிறு ஊஞ்சலில் ஒன்றாக இருக்கும் கறுப்பு - வெள்ளை புகைப்படத்தைப் பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆர்யன் கானுக்கு ஆதரவு தெரிவித்த ஹிருத்திக் ரோஷன்: விளாசிய கங்கனா

ABOUT THE AUTHOR

...view details