தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தப்பட்' தாக்கம்: ராஜஸ்தான் காவல் துறை செய்த காரியம் - ராஜஸ்தான் காவல்துறை

டாப்சி நடிப்பில் வெளியான 'தப்பட்' படத்தை பார்த்து ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் பெண்களுக்கு எதிராக வீட்டில் நடக்கும் வன்முறை குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் ஒன்றை அறிவித்துள்ளனர்.

Thappad
Thappad

By

Published : Mar 6, 2020, 2:35 PM IST

நடிகை டாப்சி சமீபகாலமாகக் கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதைகளைத் தேர்வுசெய்து நடித்துவருகிறார். அந்தவகையில் 'முல்க்' திரைப்படத்தைத் தொடர்ந்து அனுபவ் சின்ஹா இயக்கத்தில் அவர் நடித்துள்ள படம் 'தப்பட்'. பூஷன்குமார், கிரிஷன் குமார், அனுபவ் சின்ஹா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியானது.

கணவர் விக்ரம் (பவாய் குலாட்டி) தனது மனைவி அமிர்தா(டாப்சி பன்னு)வை அறைந்துவிடுகிறார். இதனால் கணவருக்கு எதிராக டாப்சி பன்னு போராடுவது போன்ற காட்சிகளுடன் படம் நகருகின்றது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதுமட்டுமல்லாது சமூக வலைதளத்தில் பிரபலங்கள் பலரும் பாராட்டிவருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தை பார்த்து ராஜஸ்தான் காவல் துறையினர் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் அம்மாநில பெண்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதில், பெண்களுக்கு எதிராக வீட்டில் நடக்கும் வன்முறை ஒரு குற்றம். இதில் பாதிக்கப்படும் பெண்கள் புகார் அளிக்க 1090 தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும் எனப் பதிவிட்டுள்ளனர். 'தப்பட்' படம் இதுவரை 29.55 கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபீஸில் வசூல் ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் வாசிங்க: 'தப்பட்' படத்தின் இரண்டுநாள் வசூலை வெளியிட்ட படக்குழு!

ABOUT THE AUTHOR

...view details