தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாலிவுட் நடிகருக்கு நேர்ந்த சோகம்; வீடியோ கான்ஃபரன்சிங்கில் அன்னைக்கு  இறுதி அஞ்சலி - பாலிவுட் செய்திகள்

ஊரடங்கு காரணமாக பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தன் அன்னையின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இர்ஃபான் கான்
இர்ஃபான் கான்

By

Published : Apr 26, 2020, 6:18 PM IST

லன்ச் பாக்ஸ், பி கே, சமீபத்தில் வெளிவந்த அங்க்ரேஸி மீடியம் உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் இர்ஃபான் கான்.

நடிகர் இர்ஃபான் கான் தனியாக மும்பையிலும், அவரது தாய் ஜெய்ப்பூரிலும் வசித்து வந்த நிலையில், இர்ஃபானின் தாய் உடல் நலக் குறைவு காரணமாக அவருடைய 85 வயதில் நேற்று ஜெய்ப்பூரில் உயிரிழந்தார்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பயணம் செய்ய முடியாததால், வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக தன் அன்னைக்கு அவர் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பாலிவுட் பிரபலங்களும் இயக்குநர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:அந்த விபத்துக்கு பின் நான் திருந்திவிட்டேன் - மனம் திறந்த 'ஜோக்கர்'வகீன் ஃபீனிக்ஸ்

ABOUT THE AUTHOR

...view details