தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சுஷாந்த் சிங்கின் மருத்துவ அறிக்கையை ரியா காண்பிக்க வேண்டும் - கே.கே.சிங் - ரியா சக்கரவர்த்தி

மும்பை : சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட சிகிச்சை குறித்தான மருத்துவ அறிக்கையை ரியா தன்னிடம் காண்பிக்க வேண்டும் என சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங் கூறியுள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்
சுஷாந்த் சிங் ராஜ்புத்

By

Published : Aug 11, 2020, 2:02 PM IST

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (வயது 34), ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தத்தின் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்தின் மரணம் இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாட்னா காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், ரியா சக்கரபேர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, பாட்னா காவல் துறையினர் பதிந்துள்ள வழக்கை, மும்பைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரியா வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, பிகார் முதலமைச்சர் நிதீஷ் அகர்வால் இவ்வழக்கின் விசாரணையை சிபிஐக்கு பரிந்துரைத்தார்.

இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு விசாரணை சிபிஐ கைக்குச் சென்றது. வழக்கை விசாரித்த சிபிஐ, ரியா உட்பட சந்தேகிக்கப்படும் ஆறு நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சுஷாந்தின் வங்கிக் கணக்கிலிருந்து ஒன்றரை கோடி ரூபாய் எடுக்கப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுஷாந்த் சிங் மருத்துவ அறிக்கை குறித்து வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிய தந்தை
இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், ரியாவிடம் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுஷாந்த் சிங் மேற்கொண்ட சிகிச்சைக் குறித்த மருத்துவ அறிக்கையை தன்னிடம் காண்பிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details