தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சுஷாந்த் வழக்கு : வீட்டு மேலாளர், காதலியின் சகோதரரை நீதிமன்றக் காவலில் விசாரிக்க உத்தரவு - சுஷாந்த் சிங் வழக்கு

மும்பை : ரியா சக்ரவர்த்தியின் சகோதரர், சுஷாந்தின் வீட்டு மேலாளர் இருவரையும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

By

Published : Sep 6, 2020, 11:10 AM IST

சுஷாந்த் சிங் மரணம் பாலிவுட்டில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் மும்பை காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ கைகளுக்கு சென்றது.

சுஷாந்த் மரணம் தொடர்பாக அவரது காதலி ரியா சக்ரவர்த்தி பலமுறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது வாட்ஸ்அப் உரையாடல் மூலம் அவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருந்தது அறியப்பட்டது. பின்னர் இந்த வழக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் விசாரிக்கத் தொடங்கினர். சுஷாந்த் போதை மாத்திரைகள் உபயோகித்தது தொடர்பாக அப்டெல் பசித் பரிகார், ஜைத் விலாத்ரா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவியதாக கைசான் இப்ராஹிம் எனும் போதைப் பொருள் விற்பன்னரும் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ரியாவின் சகோதரர் சோவிக் சக்ரவர்த்தி, சுஷாந்த்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா ஆகியோரும் போதைப் பொருள் ஒழிப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இவர்கள் இன்று (செப். 5) மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் நீதிமன்றக் காவலில் வைத்து அவர்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details