தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'என் ஆபிஸுக்கு டிசைன் பண்ணித் தர முடியுமா?' - மனைவியிடம் இன்ஸ்டாவில் ஷாருக் கேள்வி - ரெட் சில்லி என்டர்டெய்ன்மென்ட்

மும்பை: ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தைப் புதுப்பித்துத் தருமாறு தனது மனைவி கௌரி கானுக்கு ஷாருக் கான் சமூக வலைதளம் வாயிலாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஷாருக்கான்
ஷாருக்கான்

By

Published : Jul 5, 2020, 11:50 AM IST

பாலிவுட் கிங் ஷாருக் கானின் மனைவி கௌரி கான் சிறந்த இன்டீரியர் டிசைனர் (உள் அலங்காரம்) என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தற்போது ஷாருக் கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் அலுவலகத்தைப் புதுப்பிக்கும் பணியில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், அலுவலகத்தின் தோற்றத்தை மாற்றும் விதமாக இன்டீரியர் டிசைனிங் செய்யவேண்டி தனது மனைவிக்குச் சமூக வலைதளம் வாயிலாகக் கோரிக்கை வைத்துள்ளார். அதில், ”தயவுசெய்து நீங்கள் எனது ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் அலுவலகத்தை ஒரு புதிய சீலிங் உடன் புதுப்பித்துத் தர முடியுமா?” என்று கேட்டுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக கௌரி கான், “எங்கள் குழு ஏற்கனவே பணியில் இறங்கி விட்டது” என்று பதிவிட்டிருந்தார். பாலிவுட்டின் ஸ்டார் ஜோடிகளான இவர்களின் இந்தப் பதிவு ஒரு ஸ்மார்ட் விளம்பர யுக்தி என ரசிகர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

விரைவில் ஷாருக் கான் புதிய படங்களில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் எப்போது வெளியாகும் என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்', 'பிரம்மஸ்திரா' ஆகிய திரைப்படங்களில் ஷாருக் கான் சிறப்பு வேடங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில், ஷாருக் நெட்ஃபிளிக்ஸ் தொடர்களைத் தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இவர் தயாரிப்பில் வெளியான 'Bard Of Blood', 'Betaal' ஆகிய தொடர்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தன.

ABOUT THE AUTHOR

...view details