பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மகள் இரா கான் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்டவைகளில் அவ்வப்போது புகைப்படத்தை பதிவிடுவார். அந்த வகையில், அவர் சமீபத்தில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டார். அதற்கு பலரும் கருத்து தெரிவித்தனர்.
இரா கானின் புதிய புகைப்படம்: கிண்டல் செய்த நெட்டிசன்கள்! - புகைப்பட பதிவு
ஆமீர் கானின் மகள் இரா கான் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை நெட்டிசன்கள், ஸ்பைடர் வுமனா(Spider Women) நீங்கள் என்று கிண்டலடித்து பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இவர் சினிமாத் துறையில் அடியெடுத்து வைப்பார் ஆனால் நடிகையாக அல்ல இயக்குநராக என்று அவரது தந்தை ஆமீர் கான் கூறினார். அதேபோல் விரைவில் அவர் இயக்குநராக களம் இறங்கவுள்ளார் என்று பாலிவுட் வட்டாரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், இரா கான் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு பலரும் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர். அவர் கருப்பு நிறத்தில், சிலந்தி உருவம் போல் ஆடை வடிவமைத்து அதனை அணிந்துள்ளார். அதற்கு நெட்டிசன்கள் இது எவ்விதமான ஸ்பைடர், ஒரு வேளை ஸ்பைடர் வுமனா(Spider Women) என்றும், நீங்கள் பேசாமல் புர்ஹா அணிந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.