தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சோனு சூட் அலுவலகத்தில் வருமானவரி சோதனை! - சோனு சூட்

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோனு சூட்
சோனு சூட்

By

Published : Sep 15, 2021, 5:36 PM IST

மும்பை:தமிழ், இந்தி, தெலுங்கு சினிமாக்களில் பிஸியாக வலம்வருபவர் நடிகர் சோனு சூட். தற்போது மும்பையில் உள்ள இவரது அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோனு சூட்டின் நிறுவனம் உள்பட அவருக்கு தொடர்புடைய ஆறு இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரின் சொத்துகளை ஆய்வு செய்து வருவதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவரது நிறுவனங்களின் கணக்குகளில் முறைகேடு இருப்பதாக புகார் வந்த நிலையில், இந்தச் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: டெல்லியில் பயங்கரவாதிகள்: நால்வருக்கு 14 நாள்கள் காவல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details