கரோனா பொது முடக்கம் காரணமாக பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர் திரும்ப, போக்குவரத்து வசதி செய்து கொடுத்து நற்பெயர் பெற்றவர், நடிகர் சோனு சூட். அதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி, அதன் மூலம் அவர் வழங்கி வருகிறார். கரோனா காலத்தில் மக்களுக்கு உதவிய நிகழ்வு குறித்து புத்தகம் ஒன்றையும் சோனு சூட் வெளியிட்டிருந்தார்.
இந்தியா முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில், சோனு சூட் தன்னால் முடிந்த அளவு உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.