கரோனா ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொல்ல முடியாத அளவு துயரத்தைச் சந்தித்தனர். தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றதாலும், பசிக் கொடுமையாலும் அதில் சிலர் உயிரிழக்க நேர்ந்தது.
நடிகர் சோனு சூட், இந்த அவலத்தைக் கண்டு சகிக்க முடியாமல் உடனடியாக களத்தில் இறங்கினார். சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு பேருந்து ஏற்பாடு அவர்களுக்கு தேவையான உணவு அளித்தும் தன்னால் முடிந்த அளவு உதவி செய்திருந்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய அனுபவம்: புத்தகம் எழுத இருக்கும் சோனு சூட் - சோனு சூட் இன் படங்கள்
மும்பை: தேசிய ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிய அனுபவத்தை விவரிக்கும் விதமாக நடிகர் சோனு சூட் புத்தகம் ஒன்றை எழுதத் திட்டமிட்டுள்ளார்.
![புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய அனுபவம்: புத்தகம் எழுத இருக்கும் சோனு சூட் சோனு சூட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:30:58:1594807258-8029479-369-8029479-1594775026155.jpg)
இதுதான் எனது நோக்கம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுவதில் என்னை ஒரு ஊக்கியாக மாற்றியமைத்த கடவுளுக்கு நன்றி. மும்பையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இதயம் துடிக்கும் போது, இந்த நாட்டின் மற்றொரு பகுதியில் அவர்களுக்காக பல இதயங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்போது எனக்கு உ.பி., பீகார், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், உத்தரகண்ட் என பல மாநிலங்களில் புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். நான் எப்போதும் அவர்களுடன் தொடர்பில் இருப்பேன். இந்த அனுபவம் எப்போதும் எனது மனதில் இருந்துகொண்டே இருக்கும்.
இந்தக் காலகட்டத்தில் நான் சந்தித்த மனிதர்கள், என் வாழ்வை மாற்றியமைத்த தருணங்கள், அனுபவங்கள் என அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு புத்தகமாக வெளியிட முடிவு செய்துள்ளேன். இந்தப் புத்தகத்தை பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா வெளியிட இருக்கிறது என்று அவர் கூறினார்.
சோனு சூட், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவியது மட்டுமல்லாது பஞ்சாப்பில் உள்ள மருத்துவர்களுக்கு பிபிஇ கிட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.