தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

400 குடும்பங்களுக்குப் பொருளாதார உதவிகள்- வாக்குறுதி அளித்த சோனு சூட் - புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு சோனு சூட் உதவி

ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்திருக்கும் 400 குடும்பங்களுக்கு பொருளாதார உதவிகளை செய்து தருவதாக நடிகர் சோனு சூட் உறுதியளித்துள்ளார்.

Sonu Sood pledges support for  families of deceased migrants
Sonu Sood pledges support for families of deceased migrants

By

Published : Jul 13, 2020, 9:18 PM IST

கரோனா தொற்று காரணமாக, தேசமெங்கும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு காயமடைந்த, உயிரிழந்த 400 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்குப் பொருளாதார உதவிகளை செய்வதாக நடிகர் சோனு சூட் உறுதியளித்துள்ளார்.

கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தகவல்களை (முகவரி, வங்கி கணக்கு) உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் அலுவலர்களை தொடர்புக்கொண்டு நடிகர் சோனு சூட் பெற்றார்.

"உயிரிழந்த, படுகாயமடைந்த புலம்பெயம் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலம் கிடைக்கும் வகையில், உதவிசெய்ய நான் முடிவு செய்துள்ளேன். அவர்களுக்கு ஆதரவளிப்பது என்னுடைய தனிப்பட்ட பொறுப்பு என்று உணர்கிறேன் என தனது அறிக்கை ஒன்றில் சோனு சூட்" தெரிவித்துள்ளார்.

சென்ற மாதம் சுமார் 300 புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல விமான போக்குவரத்துக்கு நடிகர் சோனு சூட் ஏற்பாடு செய்துள்ளார். மேலும் பல ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்லவும் சோனு சூட் போக்குவரத்து வசதி செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...'தில் பெச்சாரா டைட்டில் ட்ராக் வெளியீடு'- சுஷாந்தை நினைவுகூர்ந்த சோனு சூட்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details