ஹைதராபாத்தில் வசிப்பவர் உனதாதி ஷ்ரதா. இவர் பன்னாட்டு நிறுவனம் () ஒன்றில் பணிபுரிந்து வந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக கரோனா நெருக்கடியால் தனது வேலையை இழந்தார். பின்னர் தன் வாழ்வாதாரத்திற்காகக் காய்கறிகளை விற்கும் வேலையில் சேர்ந்தார். ஷ்ரதாவின் நிலை குறித்து அறிந்த நடிகர் சோனு சூட் அவருக்கு வேலை வழங்கியுள்ளார்.
காய்கறி விற்ற பட்டதாரி பெண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்த சோனு சூட் - காய்கறி விற்ற பெண்
மும்பை: கரோனா நெருக்கடியால் வேலையை இழந்த பட்டதாரி பெண்ணுக்கு நடிகர் சோனு சூட் வேலை வழங்கியுள்ளார்.
சோனு சூட்
இதுகுறித்து ஷ்ரதா கூறுகையில், ”சமீபத்தில் எனக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட்டுவிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அப்போது நான் நேர்காணலில் பங்கேற்றேன். எனக்கு கிட்டத்தட்ட வேலை உறுதியாகிவிட்டது. இறுதி அழைப்புக்காகக் காத்திருக்கிறேன்” என்றார்.