தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கரோனாவால் பாதிக்கப்பட்வர்களுக்கு நாம் உதவுவோம் - சோனு சூட் - சோனு சூட் லேட்டஸ் செய்திகள்

மும்பை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் அனைவரும் முன்வந்து உதவ வேண்டும் என நடிகர் சோனு சூட் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sonu
Sonu

By

Published : Apr 29, 2021, 9:57 AM IST

கரோனா பொதுமுடக்கம் காரணமாக பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி தவித்த குடிபெயர் தொழிலாளர்களுக்கு அவரவர் சொந்த ஊர் திரும்ப போக்குவரத்து வசதி செய்துகொடுத்தவர் நடிகர் சோனு சூட்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறக்கட்டளை அமைத்து அதன்மூலம் அவர் வழங்கினார். கரோனா காலத்தில் மக்களுக்கு உதவிய நிகழ்வு குறித்து புத்தகம் ஒன்றை சோனு சூட் வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவர் தற்போது மக்கள் மனத்தில் நாயகனாகியுள்ளார்.

இந்நிலையில், தனது சமூக வலைதளப்பக்கத்தில் சோனு சூட், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் அனைவரும் உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, "நாடு முழுவதிலுமிருந்து உதவி கேட்டு எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. என்னால் முடிந்தவரை முயற்சி செய்து அவர்களுக்கு உதவிவருகிறேன்.

எனக்கு இன்னும் கூடுதலான உதவும் கரங்கள் தேவை. உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் அனைவரும் உதவுவோம்" எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details