தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காவலர்களுக்கு முகக்கவசம் வழங்கி உதவிய சோனு சூட் - புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

மும்பை: கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் களப்பணியாற்றும் காவல்துறையினருக்கு 25 ஆயிரம் முகக்கவசங்களை வழங்கிய சோனு சூட்டுக்கு மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நன்றி தெரிவித்துள்ளார்.

சோனு சூட்
சோனு சூட்

By

Published : Jul 18, 2020, 12:59 AM IST

கரோனா ஊரடங்கு காலத்தில் ரியல் ஹீரோவான ரீல் வில்லன் சோனு சூட், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியது மூலம் திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என, பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

புலம்பெயர்ந்தோருக்கு உதவிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக புத்தகம் ஒன்றை எழுத இருப்பதாக, சோனு சூட் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்கிடையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் களப்பணியாற்றும் மும்பை காவல் துறையினருக்கு 25 ஆயிரம் ஃபேஸ் ஷீல்டுகளை வழங்கியுள்ளார்.இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில், மும்பை காவல்துறையினருக்கு 25 ஆயிரம் ஃபேஸ் ஷீல்டுகளை வழங்கிய உங்கள் தாராள பங்களிப்புக்கு எங்களது நன்றிகள் என பதிவிட்டிருந்தார்.
இவரின் இந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக சோனு சூட், உங்களின் அன்பான இந்த வார்த்தைகளால் நான் உண்மையிலேயே கௌரவப்படுத்தபட்டுள்ளேன். காவல்துறை சகோதர சகோதரிகளே எங்களது உண்மையான ஹீரோக்கள்.

அவர்கள் செய்துவரும் பணி பாராட்டுக்குரியது. அவர்களது பணிக்கு என்னால் முடிந்த உதவி இது என்று ட்வீட் செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details