மும்பை:சோனு சூட் தனது மும்பை அலுவலங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கரோனா சூழலில் அவதிப்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு உதவியதன் மூலம் புகழ் வெளிச்சம் பெற்றவர் சோனு சூட். இவர் மீது அப்போதிருந்தே பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எனினும் சரியான ஆதரங்கள் எதுவுமில்லை. இந்நிலையில், வருமான வரித்துறை அலுவலர்கள் அவரது மும்பை அலுவலங்களில் சோதனை நடத்தி, சோனு சூட் முறைகேடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கைப்பற்றியதாக தகவல் வெளியானது.
இதுவரை ரெய்டு குறித்து வாய் திறக்காத சோனு சூட், தற்போது மௌனம் கலைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், உங்கள் கதையை நீங்களே எப்போதும் சொல்லத் தேவையில்லை. காலம் பதில் சொல்லும்; இந்திய மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என மனதார உறுதிமொழி எடுத்துக் கொண்டவன் நான். எனது தொண்டு நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பணமும், மக்களுக்கு உரிய நேரத்தில் உதவுவதற்காகவே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.