கடந்த ஞாயிறு அன்று பொது விழா ஒன்றில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், படித்த, பணக்கார குடும்பங்களில்தான் விவாகரத்து அதிகமாக நடக்கிறது. கல்வி, செல்வத்தோடு கர்வமும் அவர்களுக்கு அதிகமாகிவிடுகிறது. இதனால் குடும்பங்கள் சீரழிந்துவிடுகின்றன. குடும்பங்கள் சீரழிவதால் இந்த சமூகமும் சீரழிகிறது. ஏனென்றால், சமூகம் என்பதும் ஒரு குடும்பம்தான் என பேசினார்.
ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துகள் முட்டாள்தனமானது - சோனம் கபூர் - sonam kapoor latest
விவாகரத்து பற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசிய கருத்துகள் முட்டாள்தனமானது என பாலிவுட் நடிகை சோனம் கபூர் விமர்சித்துள்ளார்.
Sonam slams RSS chief Mohan Bhagwat for divorce comment
இந்தப் பேச்சு கடும் விமர்சனத்தை சந்தித்துவருகிறது. சமூக வலைதளங்களில் மோகன் பகவத்தை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர். இந்நிலையில் மோகன் பகவத்தின் கருத்துக்கு பாலிவுட் நடிகை சோனம் கபூர் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சோனம் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், எந்த அறிவுள்ள மனிதன் இப்படி பேசுவான்? முட்டாள்தனமான கருத்துகள்... என பதிவிட்டுள்ளார்.