பிரபல பாலிவுட் நடிகையும், நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர், ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் பிற நட்சத்திரங்களைப் போல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவும் வீட்டில் ஓய்வெடுத்தும் தனது நேரத்தை செலவழித்து வருகிறார்.
இதற்கிடையில் தற்போது சோனம் கபூர் தனது கணவர்ஆனந்த் அஹுஜா உடன் லண்டன் சென்றுள்ளார். இதுகுறித்து சோனம் தனது சமூக வலைதள பக்கம் ஆன இன்ஸ்டாகிராமில், விமானத்தில் இருந்தபடியே லண்டன் நகரின் புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி சோனம் கபூர் விமானத்தில் முகக் கவசத்துடன் பயணிக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஸனாக லண்டன் நான் திரும்பி வருகிறேன். மிகவும் அழகாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, சோனம் கபூர் டெல்லியில் உள்ள தனது மாமியார் இல்லத்தில் ஊரடங்கு காரணமாக தங்கியிருந்தார்.
கணவருடன் லண்டனுக்குப் பறந்த சோனம் கபூர்
மும்பை: பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது கணவருடன் லண்டனுக்கு சென்றுள்ளார்.
சோனம் கபூர்
பின் ஜூன் 9-ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு, தனது பெற்றோர், உடன்பிறப்புகளை காண்பதற்கு மும்பைக்குத் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.