சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட்டிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தனது பெற்றோர், சகோதரர்களுடன் மும்பையில் உள்ள ஜுஹு பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பெயர் ராமாயணம்.
சோனாக்ஷி சின்ஹா கடந்தாண்டு நவம்பர் மாதம் தனது வீட்டின் மேற்புறத்தை தனது விருப்பத்திற்கு மாற்றி வடிவமைத்துள்ளார். இருப்பினும் தனது சொந்த பணத்தில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பதை தனது கனவாக கொண்டுள்ளார். இந்த கனவை சோனாக்ஷி சின்ஹா தற்போது நனவாகியுள்ளது. மும்பை பாந்த்ராவில் 4 பிஹெச்கே வீட்டை தனது சொந்த பணத்தில் வாங்கியுள்ளார்.