மும்பை: 2016இல் வெளியான 'ஃபோர்ஸ் 2' படத்தின் ஆக்ஷன் காட்சியின் மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
பாலிவுட் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராகத் திகழ்ந்து வரும் சோனாக்ஷி சின்ஹா வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் சூப்பர் ஹிட்டான 'காக்க காக்க' படத்தின் ரீமேக்காக இந்தியில் ஜான் ஆபிரகாம் - ஜெனிலியா நடிப்பில் 2011இல் வெளிவந்த படம் 'ஃபோர்ஸ்'. இந்தப் படம் சூப்பர் ஹிட்டான நிலையில், இதன் இரண்டாம் பாகமாக 2016ஆம் ஆண்டு 'ஃபோர்ஸ் 2' வெளியானது.
இதில், ஹீரோயினாக சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்தார். படத்தில் ஜான் ஆபிரஹாமுக்கு இணையாக அதிரடி ஆக்ஷன் காட்சிகளை வெளுத்து வாங்கி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.