நெருக்கமான காட்சிகள் சரியாக அமைய இது தேவை: 'சின்ன ஐஸ்வர்யாராய்' - சினேகா உல்லால் படங்கள்
மும்பை: திரையில் நெருக்கமான காட்சிகள் சரியாக அமைய படப்பிடிப்பில் வசதியான சூழ்நிலை முக்கியம் என நடிகை சினேகா உல்லால் தெரிவித்துள்ளார்.
சல்மான் கான் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான 'லக்கி: நோ டைம் ஃபார் லவ்' படத்தில் ஜோடியாக நடித்தவர், சினேகா உல்லால். அதுமட்டுமில்லாது இவரது முகத்தோற்றம் ஐஸ்வர்யா ராயின் அசலில் இருப்பதால், ரசிகர்களிடையே இவர் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில், சினேகா உல்லால் திரையில் நெருக்கமான காட்சிகள் சரியான விதத்தில் அமைய வேண்டுமெனில் படப்பிடிப்பு தளம் சரியான ஒரு சூழ்நிலையில் அமைந்திருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, 'ஒவ்வொரு திரைப் பிரபலங்களும் கடந்துசெல்லும் கடினமான காட்சிகள் உள்ளன. என்னைப் பொறுத்தவரை நெருக்கமான காட்சிகள்.