தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சின்னக் கீறல் கூட இல்லை; நடிகர் சித்தார்த் உயிரிழந்தது எப்படி? - Sidharth Shukla autopsy

நடிகர் சித்தார்த் சுக்லா உயிரிழப்பிற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் அவரது உடற்கூராய்வு அறிக்கையில், “காயங்கள் எதுவும் தென்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

Sidharth Shukla
Sidharth Shukla

By

Published : Sep 3, 2021, 10:15 PM IST

ஹைதராபாத் : பிக்பாஸ் பிரபலம் நடிகர் சித்தார்த் சுக்லா மும்பை மருத்துவமனையில் வியாழக்கிழமை (செப்.2) உயிரிழந்தார். அவரின் உடற்கூராய்வு அறிக்கைகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகின.

அதில் அவரது உடலில் சிறிய காயங்கள் கூட இல்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மரணத்துக்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்தும் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை.

நிகழ்ச்சியொன்றில் சித்தார்த் சுக்லா

இந்த நிலையில் அவரது உடல் இன்று (செப்.3) மருத்துவ குழுவினர் முன்னிலையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இது தொடர்பான அறிக்கையில், “அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை” என்பது தெரியவருகிறது.

இதையடுத்து அவரது உடலின் உள்ளுறுப்புகள் இரசாயன ஆய்வுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஹிஸ்டோபாதாலஜி (Histopathology) ஆய்வுக்கு பின்னரே தெளிவான விவரங்கள் கிடைக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.

சித்தார்த் சுக்லா

இந்நிலையில் சித்தார்த் குடும்பம் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “உங்களை போலவே நாங்களும் துயரத்தில் இருக்கிறோம். உங்களை போலவே நாங்களும் பேரதிர்ச்சியடைகிறோம். சித்தார்த் என்ற தனிப்பட்ட நபர் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அவருக்கு நாங்கள் சில கடமைகள் ஆற்ற வேண்டும். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தார்த் சுக்லா

சித்தார்த் சுக்லா ஒரு மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கினார். இவர் பாபுல் கா ஆங்கன் சோட்டி நா நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

அதன்பின்னர் ஜானே பெச்சானே சே ... யே அஜ்னாபி, லவ் யு ஜிந்தகி போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றினார், ஆனால் அவரை படுபிரபலமாக்கியது பாலிகா வடு தான். பின்னாள்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பிக்பாஸ் பிரபலம் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details